டெல்லி: லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் 2ம் கட்ட இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
டெல்லியில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மே மாதத்திற்கான நிதி உதவியைக் தருமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர். டெல்லி அசங்கதித் நிர்மன் மஜ்தூர் யூனியனின் செயலாளர் தானேஷ்வர் ஆதிகூர், மாநில தொழிலாளர் அமைச்சர் கோபால் ராய்க்கு சமீபத்தில் கடிதம் எழுதி உள்ளார்.
புதிய மற்றும் பழைய தொழிலாளர்கள் பற்றி நிலுவையில் உள்ள விவரங்கள், தகவல்களை பதிவு செய்து முடிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். அப்போது தான் அரசின் பலன்கள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடையும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
லாக்டவுன் காரணமாக லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அமைப்பு சாரா துறையில் இருக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் எவ்வாறு, எப்போது வேலை பெறுவார்கள் என்பதில் தெளிவு இல்லை. இந்த மக்கள் தங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும் வகையில் நிதி உதவியை தருமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தோம் என்று அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிலாளர் துறை அமைச்சகம், இது தொடர்பாக தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ரூ.20 ஆண்டு கட்டணத்தில் அமைப்புசாரா துறையில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வருடாந்திர அடிப்படையில் மாநில அரசில் தங்களை பதிவு செய்யலாம். ஆன் லைனிலும் இந்த விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.