தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
கடந்த முறை கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர், திருச்சி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இந்தமுறை இதில் ஓரிரு தொகுதிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக 4 புதிய வேட்பாளர்களை தேர்தெடுக்க காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி குறித்த அறிவிப்பும் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.