Skip to content
  • Tue. Sep 1st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா உலகம்

130வது பிறந்தநாள்:  சட்டமேதை அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில்  தீர்மானம்

Apr 16, 2021

வாஷிங்டன்:   சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி, அவரை   கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோகன்னா  தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி என அழைக்கப்படுபவர் டாக்டர்  அம்பேத்கர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ந்தேதி பொதுவிடுமுறையாக இந்த ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.  அம்பேத்கரின்  பிறந்த நாளையொட்டி,  அவரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதை ரோகன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,  “உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் பி.ஆர். அம்பேத்கரை கவுரவிக்கும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன்” , அம்பேத்கர் இந்தியாவிற்காகவும், அமெரிக்காவுக்காவும் நின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது தீர்மானத்தில், கடந்த  2010-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, “நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைப்பற்றி கவலையின்றி, ஒவ்வொரு நபரும் கடவுள் கொடுத்த திறனை நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். டாக்டர் அம்பேத்கரைப் போன்ற ஒரு தலித் தன்னை உயர்த்திக்கொண்டு, அரசியல் சாசனத்தின் அம்சங்களை எழுத முடியும். அது அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது” என கூறியதை தீர்மானத்தில் ரோகன்னா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோகன்னா தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post navigation

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு… 1185 பேர் உயிரிழப்பு…
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று….!

Related Post

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

உலகம்

உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar
உலகம் மருத்துவம்

மலேரியா காய்ச்சல் : விமான நிலைய ஊழியர் 2 பேர் பலி… விமானத்தில் வந்த கொசு காரணமா ? ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகம்…

August 26, 2026 Sundar
இந்தியா உலகம்

சீனா–நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: காரணம் என்ன? – பிரதீப் ஜான் விளக்கம்

August 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer