டெல்லி: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடாது மழை பொழிந்து வருகிறது.. இதன் காரணமாக சென்னை சாலைகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  ‘சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்- தயவுசெய்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுங்கள், பத்திரமாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.