ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

சிம்லா நகராட்சியில் மொத்தமுள்ள 34 இடங்களில் 28 இடங்களுக்கான முடிவுகள் தெரியவந்துள்ளது.

இதில் 20 இடங்களில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது, பாஜக 7 இடங்களிலும், மா. கம்யூனிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு “இமாச்சலப் பிரதேச மக்கள் எங்கள் அரசு மற்றும் வளர்ச்சி பணிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.