புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வழக்கமான அளவில் வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஜான்குமார் முன்னிலை வகித்து வந்தார். தொடர்ந்து என்.ஆர் காங்கிரஸ் – காங்கிரஸ் இடையே குறிப்பிட்ட அளவு வாக்கு வித்தியாசம் இருந்து நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ்: 14,782 வாக்குகள்
என்.ஆர் காங்கிரஸ்: 7,612 வாக்குகள்
நாம் தமிழர்: 620 வாக்குகள்