பெங்களுரூ:
பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளத்து என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடாகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி. பாஜகவின் பணம், அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் இனி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், வாக்குறுதிப்படி கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel