2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 9 இடங்களில் போட்டியிடுகிறது.

இதுதொடர்பாக திமுக-வுடன் இன்று உடன்பாடு எட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகள் தவிர புதுச்சேரியில் உள்ள ஒரே தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel