கர்நாடக மாநிலத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, இரு சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும்,எஉ சிரா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா போட்டியிடுவார் என்றும் கூறினார்.
மேலும், இடைத்தேர்தலில், ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம், காங்கிரஸ் கட்சி தனியாக நின்றே வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சிக்கு மாநிலத்தில் நல்ல செல்வாக்கும், பலமும் உள்ளது, அதுபோல கட்சியில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை. எனவே, இணைந்து ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.