சென்னை

த்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கியதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செவப்பெருந்த்கை கண்டனம் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வெகு நாட்களாக நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   நேற்று மத்திய பாஜக அரசு அந்த எதிர்ப்பையும் மீறி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமலாக்கி உள்ளது.  இதற்கு நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ,

“பாஜகவை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை  அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் திட்டங்களை பாஜக தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இந்தியாவில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. 

சிறுபான்மை மக்களை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதற்கான தொடர் அச்சுறுத்தல்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது. பிரித்தாளும் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை பாஜக அமல்படுத்துகிறது.” 

என்று தெரிவித்துள்ளார்.