ஈரோடு
திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு திமுக அலுவலகத்தில் கடந்த 27 ஆம் தேதிய பரத் பந்த் குறித்த பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் “திமுக தனது வரலாற்றில் எந்த ஒரு பிரச்சினையிலும் பயப்படாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த போது திமுக நடத்திய போராட்டம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது., மத்திய அரசு அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் கூறி தமிழக aரசைக் கலைத்தது.
தற்போதைய மத்திய அரசு எங்கள் ஆட்சிக்கு இது போல மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்கும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறது. நாம் செப்டம்பர் 27 போராட்டத்தைத் தீவிரப்படுத்தி மத்திய அரசுக்கு நாமே வாய்ப்பை அளிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
கந்தசாமியின் பேச்சு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆகியோரது எதிர்ப்பை கிளப்பியது. மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக மிகவும் இழிவாகப் பேசியதற்கு அவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
அவர்கள், ”வரும் 27 ஆம் தேதி அன்று நாடு தழுவிய பந்த் அதுவும் அனைத்து கட்சி கூட்டத்தில் சர்ச்சைக்குரிய 3 பண்ணை சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியைக் குறை கூறுவது தவறாகும். திமுக முன்னாள் எம் பி இந்திராவுக்கு எதிரான தனது வார்த்தைகளை வாபஸ் பெவேண்டும்” என எச்சரித்தனர்.
இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, பிற்காலத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தியைக் கடுமையாக ஆதரித்ததாகக் கூறி, கிளர்ந்தெழுந்த காங்கிரஸ் தலைவர்களைச் சமாதானப்படுத்தினார்.
மேலும் அமைச்சர், ”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சை புறக்கணிக்கலாம். திமுக வலுவாகப் பரபரப்பை ஏற்படுத்தினால், பிரதமர் மோடி மாநில அரசைத் தொந்தரவு செய்வார் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நிலைப்பாட்டை நான் மறுக்கிறேன். தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்கப் பயப்பட மாட்டார்” என்று உறுதியளித்தார்.
இதையொட்டி கூட்டத்தில் அமைதி ஏற்பட்டுள்ளது.