புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக இருந்த திவ்யா ஸ்பாந்தனா நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ரோகன் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோகன் குப்தா இதற்கு முன்னதாக கட்சி ஊடகத்துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

இந்த மாற்றம் தொடர்பாக ஸ்பாந்தனாவை சில ஊடகவியலாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் தொடர்பில் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.