லே

ந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுல் காந்தியின் லடாக் பயணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த  ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ.க்கு நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 17 ஆம் தேதி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள லே பகுதிக்குச் சென்றார்.

பிறகு அவர்  பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலும் 4 நாட்களுக்கு தனது பயணத்தை நீட்டித்தார். ராகுல் காந்தி கடந்த 19-ந் தேதி லேயில் இருந்து பாங்காங் ஏரி வரை 130 கி.மீ. தொலைவுக்கு ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பின்னர் மீண்டும் லே பகுதிக்கு திரும்பிய ராகுல் காந்தி வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ (டிவிட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில். –

”இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனவரி 24-ந்தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, ஜம்முவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லியில் ராகுல் காந்தி லடாக்கிலிருந்து ஒரு பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போது  சீனாவுடனான எல்லை சவால்கள் மற்றும் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்த மக்களின் கருத்துகளை அவர் வந்து கேட்க வேண்டும் என்று அந்த பிரதிநிதிகள் குழு அழைப்பு விடுத்தது.

ராகுல் காந்தி அதை ஏற்று லடாக் வருவேன் என உறுதி மொழி அளித்தார். தற்போது அவர் லடாக் சென்றிருப்பது, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே ஆகும். ராகுல் காந்தியின் இந்த லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சியாகும்”

என்று அவர் கூறியுள்ளார்