பெங்களூரு: பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அதனை கண்டித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலைகளில் அடுப்புகளை எரியூட்டி சமையல் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர். இன்னும் சிலர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் அடங்கிய பதாகையை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.