புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்ல நிலையில் இருப்பதாகவும், கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.