சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரக்கு கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்த வழக்கில் 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி திமு, அதிமுக உள்பட பல கட்சிகள் கோரிக்கை  விடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதை  திமுக  நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் திரு. T.R.பாலு  குடியரசுத் தலைவர் அளித்துள்ளார். தமிழக அமைச்சரவை 2018-ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று ஆணை பிறப்பிக்குமாறு அதில் வலியுறுத்தி இருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிர்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, எழுவர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் @mkstalin குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை. அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், சமூகத்தில் பல விரும்பாத செயல்கள் நடக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.