சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் 15 தொகுதிகளிலும் பாஜகவுடன் 5 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகிறது. இதனால், அந்த தொகுதிகளில் தேர்தல் களம் அதிதீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 100ஆண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி
பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு வேளச்சேரி தொகுதிமட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து பல தொகுதிகளில் களமிறங்குகிகறது.
அதன்படி, அதிமுகவை எதிர்த்து 15 தொகுதிகளிலும், பாஜகவை எதிர்த்து 5 தொகுதிகளிலும், பாமகவை எதிர்த்து 3 தொகுதிகளிலும் நேரடியாக களமிறங்குகிறது. இதனால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் களம் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.