டெல்லி: கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மாநிலம் முழுவதும் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செய்தும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் திமுக அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடமை பேசும்போது, டாக்டர் கலைஞரின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரைச் சந்திக்கும் வாய்ப்பும், பல சமயங்களில் அவர் சொல்வதைக் கேட்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அவருடைய ஞான வார்த்தைகளிலிருந்தும், அறிவுரைகளிலிருந்தும் பலர் பயனடைந்து உள்ளனர். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.”