டேராடூன்

காங்கிரஸ் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது

இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் காங்கிரஸ் கட்சி ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது.  மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தின் பிரம்மாண்ட கட் அவுட் இந்த பொதுக் கூட்டத்தில் வைக்கப்பட்டது   இந்த நிகழ்வு மக்களிடையே மிகவும் நெகிழ்வை உண்டாக்கியது.

இந்த பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.   தவிர மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படம்  பொதுக் கூட்ட மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த புகைப்படத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி வங்க தேச வெற்றி விழா அழைப்பிதழில் வங்க தேசம் உருவாகக் காரணமாக இருந்த மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டி உள்ளார்.  மேலும் மத்திய அரசு உண்மைகளைக் கண்டு அஞ்சுவதாகவும் அவர் தனது உரையில் கூறி உள்ளார்.