டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாராளுமன்றத்தின் இருஅவைகளையும் முடக்கி வரும் காங்கிரஸ் கட்சி, இன்று மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் போராட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு. விலைவாசி உயர்வை கண்டித்து, ராகுல்காந்தி உள்பட கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்து வந்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.