ரூர்

மிழகத்துக்கு 9 வாரங்களாக 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று கரூர் எம்.பி. ஜோதிமணி  தனடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது ஜோதிமணி

‘100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, (2 மாதத்துக்கு மேலாக) ஊதியம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். அதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர். நமது கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60,000 பயனாளிகள் உள்ளனர்.

நாண் 25,000 பயனாளிகளை நேரில் சந்தித்துள்ளேன்.. இவர்களில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். உடனடியாக இவர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரிக் கடந்த செப.13-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதி இதுவரை பதிலில்லை. மத்திய அரசு உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கவேண்டும்.’

என்று தெரிவித்துள்ளார்.