காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

Must read

டில்லி

நாளை (02.04.2019) காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  வெளியிடுகிறார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.   மக்களவை தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.   தேர்தலில் முக்கியமாக வாக்காளர்கள் எதிர்பார்ப்பது வேட்பாளர் பட்டியலும் ஆகும்.   காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்படும் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.    அக்கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபால் அந்த அறிக்கையை அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில் “வரும் மக்களவை தேர்தல் 2019 க்கான கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11.45 மணிக்கு ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.   இந்த நிகழ்வு அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம், 24 அக்பர் சாலை, டில்லி என்னு இடத்தில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article