சென்னை: விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில்இணைந்தார். கடந்த சில மாதங்களாக கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்த விஜயதரணி, இன்று பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் விஜயதாரணி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், பெண் என கூறி தன்னை ஓரங்கட்டுவதாகவும், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி புலம்பி வந்தார். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, குமரி தொகுதியை கேட்டு வந்த நிலையில், அந்த தொகுதி கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தவர்,.பல காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார்.
இந்த நிலையில், இந்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னினையில் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுருந்த விஜயதாரணி, அண்மையில் நடந்த தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட விஜயதரணி பங்கேற்கவில்லை. அதுபோல தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தை பதவி ஏற்ற சத்தியமூர்த்தி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் பாஜகவில் ஐக்கியமாகவது உறுதியானது. ஆனால், அவர் இணைய மாட்டார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்குச் சென்ற விஜயதரணி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் விஜயதரணி இணைந்துள்ளார்.
முன்னதாக, பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்து விஜயதரணி பேசியுள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் சீட் அல்லது ராஜ்யசபா சீட் வேண்டும் என அவர் டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் சிலரையும் விஜயதரணி சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.