டில்லி:

ன்று வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை யில், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள்  வெளியிடப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தலைவருமான ப.சிதம்பரம், தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், இளைஞர்கள் பெண்கள்,  தலித்துகள்,  சிறுபான்மையினர் , சிறு குறு தொழிலாளர்கள்,கல்வி சுகாதாரம்,தேசிய பாதுகாப்பு வெளிநாட்டுக் கொள்கைகள் ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய வாக்குறுதி அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி,  1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கட்டாயம் என்றும்,  இது முறையாக பின்பற்றப்படும்பட்சத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழியும் என்றும் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக  நாட்டில் கற்றவர் எண்ணிக்கை உயர்ந்து, சுயசிந்தனை உருவாகி சமுதாய மாற்றம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

மேலும், ஜாதி, மத கலவரங்கள் தனிமனிதர்களை கும்பல்கள் தாக்கி கொலை செய்வது அதி தீவிரமாக தடுக்கப்படும்.

பாலியல் குற்றங்களை உடனடியாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்துடன் 50%ஒப்புகைசீட்டு எந்திரத்தை ஆய்வு செய்யும் முறை கொண்டு வரப்படும்.

மக்களை ஓட்டு போட வலியுறுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தேர்தல் நேர்மையாக தான் நடக்கிறது என மக்கள் நம்பும் வகையில், தேர்தல் முறைகேடுகள் தடுக்கப்படும்.

பாஜகவின் ஆட்சியில் நடந்த ரபேல் ஊழல் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும்.

தேசத்துரோக சட்டம்  நீக்கப்படும், அவதூறு சிவில் குற்றம் தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். பாலியல் வன்முறை, சித்திரவதை ஆகியவற்றை தடுப்பதற்காக சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கை உடனான மீனவர் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்