பெங்களுரூ:
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நலன் சீராக இருப்பதாகவும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.