டெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், நாளை, அல்லது நாளை மறுதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ வழக்கில் அவருக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டி நீதிமன்ற படிகளை ஏறி வருகிறார்.
ஏற்கனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர்நீதி மன்றமும் ஜாமின் வழங்க மறுத்து விட்ட நிலையில், இன்று ப.சிதம்பம் சார்பில் உச்சநீதி மன்றம், ஜாமீன் மனு அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பில் உள்ள குறைகளை எடுத்து காட்ட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை அவசரமாக, உடனே விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வழக்கு பட்டியலிடப்பட்டு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டெல்லி உயர்நீதி மன்றம், சிதம்பரத்தக்கு ஜாமின் மறுத்து வழக்கி தீர்ப்பில், ஏற்கனவே உள்ள வழக்கின் தீர்ப்பை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் வாசகத்தை ஒரு வரிகூட மாறாமல் பயன்படுத்தி இருக் கிறார். இன்னொரு பக்கம் நீதிபதி கைத் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் வாசகங்களை வெட்டி இதில் ஒட்டி இருப்பதாகக் புகார் எழுந்துள்ளது. மேலும், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோகித் டண்டன் என்பவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் இருந்த சில வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் இதில் நீதிபதி பயன்படுத்தி உள்ளார்.
இந்த இரண்டு தவறுகளும், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட உள்ளது. இதேபோல்தான் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் ப. சிதம்பரம் வழக்கின் வரிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.