‘’45 வயதிலேயே  பிரதமர்  பதவிக்கு ஆசைப்படும் சச்சின்’’

Must read

‘’45 வயதிலேயே  பிரதமர்  பதவிக்கு ஆசைப்படும் சச்சின்’’

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா , மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

ஊடக வெளிச்சத்தில் இருந்து ரொம்ப நாட்களாக மறைந்திருந்த ஆல்வா, இப்போது சச்சின் பைலட் விவகாரத்தில்  கருத்து தெரிவித்து மீடியாக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

‘’கொரோனா ஒரு பக்கம் மிரட்டுகிறது. இன்னொரு பக்கம் எல்லையில்  சீனா சவாலாக உருவெடுத்து நிற்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் ராஜஸ்தான் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என ஏன் அவசரப்பட வேண்டும்?’’ என சச்சின் பைலட்டுக்கு மார்கரெட் ஆல்வா, கேள்வி எழுப்பியுள்ளார்.

‘’26 வயதில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டீர்கள். உடனடியாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. . பின்னர் ராஜஸ்தானில் துணை முதல் –அமைச்சர். கூடவே நான்கு முக்கிய இலாகாக்கள். மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வேறு உள்ளது. இந்த நிலையில் 43 வயதில்  முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் நீங்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து 45 வயதில் பிரதமர் ஆகி விடலாம் என நினைக்கிறீர்களா?’’ என சச்சினை துளைத்தெடுத்துள்ளார், மார்கரெட் ஆல்வா.

-பா.பாரதி.

More articles

Latest article