டில்லி:

றுப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், 51 நாட்கள் சிறை வாசத்துக்கு  பிறகு இன்று காலை சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்த மான இடங்களில்  நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி சிக்கிய வழக்கினை அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அவர் மீது  ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்தது. அதைத்தொடர்ந்து  அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி  அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 4 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு கடந்த செப்டம்பர்  3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை, விசாரணைக்காக காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதைத்தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு டில்லி உயர்நீதி மன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. இதையடுத்து திகார் சிறையில் இருந்து இன்று காலை சிவகுமார் விடுவிக்கப்பட்டார். சுமார் 51 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது.