டெல்லி: மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.‘

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி) இன்று தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில்  மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.