டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவுசெய்து சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து   ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், சோனியா காந்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால்,  அவருக்கு அவகாசம் வழங்கப்படடது.

இதையடுத்து, 21ந்தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார்.

முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி இல்லத்துக்கு வந்து, தாயார் சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து,  மதியம் 12மணி அளவில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கார்மூலம் புறப்பட்டார். அவருடன் பிரியங்கா காந்தியும் சென்றார். அவரது காருக்கு பின்னால், சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

சோனியா காந்தி ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். இதனால் ஊடகத்தினரும், அங்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் கட்சி அலவலகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ்,. கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக புகார் அளித்தார். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறையில் ஆஜரான சோனியா காந்தியிடம்,   உதவி இயக்குநர் நிலை பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று இடி வட்டாரங்கள் தெரி வித்தன. அமலாக்கத்துறை விசாரணை 3 பிரிவுகளாக நடக்கும் என தெரிகிறது. கேள்வியின் முதல் பகுதி அவரது தனிப்பட்ட விவரங்கள். கேள்விகளின் இரண்டாம் பகுதி AJL-யங் இந்தியா இணைப்புகளில் உள்ளது. கேள்விகளின் மூன்றாவது பகுதி AJL மற்றும் யங் இந்தியாவுடனான காங்கிரஸ் இணைப்புகள் பற்றியதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

அதன்படி  சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மோனிகா சர்மா தலைமையிலான குழு காங்கிரஸ் தலைவரிடம் விசாரணை நடத்தவுள்ளது.
விசாரணை யின்போது ஐந்து அதிகாரிகள் உடன் இருப்பார்கள். விசாரணையின் போது இடையிடையே  சோனியா காந்தி ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக தனது தாயார் சோனியா காந்தியிடம் விசாரணை நடைபெற்று வரும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார்.

சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!