புதுடெல்லி:
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டம் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

நாட்டில் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு ஆகியவற்றை எதிர்த்து இன்று ‘மெகா’ ஆர்பாட்டத்தினை காங்கிரஸ் நடத்துகிறது.

வரும் 7-ம் தேதி ராகுல். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், இன்று நடக்கும் மெகா போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.