காங்கிரஸ் தேர்தல்அறிக்கை: இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் புரட்சிகரமான திட்டங்கள்…

Must read

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை கடந்த 2ந்தேதி வெளி யிட்டது. அதில், அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்து வருகிறது.  தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரம் ஏற்றம் பெற பல்வேறு புதிய அறிவிப்புகள், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உறுதியளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இளைஞர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன? 

இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களின் வளச்சிக்கு சாதகமான அத்தனை வாய்ப்புக்களையும் காங்கிரஸ் உறுதிப் படுத்தும்.  இந்திய இளைஞர்களுக்கான அதிகாரம் பின் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளில் சாத்தியப்படும்.

கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி அதிகப்படுத்தப்பட்டு , பள்ளிக் கல்வி முதல் உயர்க்கல்வி வரையிலான தரமான கல்வி அனைவருக்கும் வழங்கப்படும்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கை பாதையாக தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.

வளர்ந்து வரும் புதிய தொழில்களுக்கேற்ப இளைஞர்களின் திறன் வளர்ச்சி மேம்படுத்திட தொழில்நுட்ப வசிதிகள் மேம்படுத்தப்படும்.

வெற்றிகரமான தொழில்முனைவோர்களை உருவாக்க புதியத் தொழில் தொடங்குபவர்கள் முதல் மூன்று வருடங்கள் அனுமதிப் பெற தேவையில்லை.  மற்றும் தொழில்முனை ‘வோர் களுக்கு உதவி புரிய நிறுவன ஆதரவு குழு அமைக்கப்படும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்  UDAAN, HIMAYAT மற்றும் UMMED திட்டங்களின் மூலம் ஜம்மூ  காஷ்மீர் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சிப் பட்டறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

வேலைகளை உருவாக்குவதில் காங்கிரஸின் தொலைநோக்குப் பார்வை என்ன?

மோடி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகள் பல வேலை இழப்புகளைக் கண்டிருக்கிறது. காங்கிரஸ் இந்த போக்கை தலைகீழாக மாற்றும் மற்றும் வேலை உருவாக்குவதற்கான பாதையை அது ஏற்படுத்தித் தரும். “வேலைகள் , வேலைகள், வேலைகள்” மட்டுமே எங்கள் உறுதிமொழி.

22 லட்சம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு காலியிடங்கள் மார்ச் 2020- க்கு முன் நிரப்பப்படும்.

ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 10 லட்சம் சமூகப்பணியாளர் நிலைகள் உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுனங்கள் ஊக்குவிக்கப்படும், அதிக அளவிலான பெண்களை பணியமர்த்தும் வணிக நிறுவனங்களுக்கு நிதிச் சலுகை வழங்கப்படும்.

100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள தொழிற்நிறுவனங்களில் தொழிற்பயிற்சித் திட்டம் தொடங்கப்படும்.

காங்கிரஸ் அதிக அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முயற்சிக்கப் பட்ட மற்றும் முயற்சித்த தொழில் மாதிரிகளை பெருக்கி அதிகரித்துவரும் அன்றாடத் தேவை களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் தரிசு அல்லது பாழடைந்த நில புரணைப்பு திட்டங்கல் மூலம் லட்சக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படும்.

புதிதாய் தொடங்கப்பட்ட வணிகங்களுக்கு 3 வருட காலத்திற்கு சில சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் இருந்து விலக்குத் தரப்படும் .  (தவிர குறைந்தப் பட்ச ஊதிய சட்டம் மற்றும் வரிச்சட்டங்கள்)

More articles

Latest article