டில்லி

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை, இது ஒரு துணைக் கண்டம், என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

பாஜக ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆ.ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதைக் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

ஆ.ராசாவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் செய்தியாளர்களிடம்,

”நாங்கள் ஆ.ராசாவின் கருத்துக்களுடன் 100 சதவீதம் உடன்படவில்லை. ராசாவி கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரையும் உள்ளடக்கியவர் என்று நம்புகிறோம்.  ராமர் இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்டதால் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறோம்.

ராமர் என்பது வாழ்க்கையின் லட்சியம் மற்றும் கண்ணியம், ஆகும் ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு  ராசா தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். நாங்கள் அதை ஆதரிக்கவில்லை. பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.”

என்று கூறினார்.