அகமதாபாத்
குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 6000 கோடி நிலக்கரி ஊழல் நட்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கோல் இந்தியா என்னும் அரசு நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் சுமார் ரூ.6000 கோடிக்கும் அதிகமான அளவில் ஊழல் நட்டதுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இந்த கால கட்டத்தில் பாஜக முதல்வர்கள் மோடி, விஜய் ரூபானி, பூபேந்திர படேல் ஆகியோர் சுங்கத்துறையைக் கவனித்து வந்துள்ளனர்.
நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளரக்ளை சந்தித்தார். அப்போது அவர், “குஜராத் மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் என சிலருக்கு சுமார் 60 லட்சம் டன் கோல் இந்தியா சுரங்கங்களில் இருந்து அப்பட்டுள்ளன. இவற்றின் சராசரி விலையான ரூ.3000 கோடிக்கு இவை விற்கப்படாமல் ரூ.1800க்கு விற்கப்பட்டுள்ளது.
இதே நிலக்கரி ரூ. 8000 முதல் ரூ.10000 வரை பிற மாநிலங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைக்கு விற்கப்படுகிறது.. கடந்த 2007 ஆம் ஆண்டு யுபிஏ அரசாங்கம் வகுத்த கொள்கையின்படி சிறு மற்றும் நடுத்த ர தொழிற்சாலைகளுக்கு இந்த விலையில் விற்கப்படுகிறது. இவ்வாறு கோல் இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட நிலக்கரி அந்தந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று அடையவில்லை. குஜராத் அர்சு நிலக்கரியின் பயனாளிகள் மற்றும், தொழிக்க்ளின் பட்டியல், தேவையான நிலக்கரியினளவு ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
இந்த பட்டியலின் அடிப்படையில் கோல் இந்தியா நிலக்கரியை வழங்கி வருகிறது. ஆனால் கோல் இந்தியாவுக்கு குஜராத் அரசு பொய்யான தகவல்கள் அளித்து நிலக்கரிகளை பெற்றுள்ளது. அந்த நிலக்கரி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படாமல் வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 6000 கோடி ஊழல் நடந்துள்ளது. மேலும் இதற்காக போலி பில் தயாரிக்கப்பட்டு ஜி எஸ் டி ஊழலும், நடந்துள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் இந்த புகார் அரசியல் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.