புதுடெல்லி

பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்

நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய போது

”காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடும். =

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப்போகிறீர்களா?.

மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது. ”

என்று கூறி உள்ளார்

தேர்தல் ஆணையம் மத ரீதியாகப் பிரசாரம் செய்யக்கூடாது என அறிவித்த நிலையில்  பிரதமரே மதத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்று வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசியதாகப் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

மேலும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் முறையிட்டுள்ளனர்.