சென்னை

திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.

இதையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் முதல்வ்ர் லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் எம்பி, மத்திய பாதுகாப்ப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

அவ்வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

”மு க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

தமிழக மக்கல் ஒரு மாறுதலுக்காக வாக்களித்துள்ளனர்.   நாம் தங்களின் தலைமையில் நமது அதை நம்பிக்கையுடன் சரியான திசையில் சென்று நிரூபிப்போம்.

நல்வாழ்த்துக்கள்’

என பதிந்துள்ளார்.