நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டது. இதில் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அவற்றில் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பா.ரமேஷை 29,104 வாக்குகள் வித்தாயாசத்தில் தொற்கடித்துள்ளார்.