ண்டிகர்

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய உயர்நீதிமன்ற மனுவை காங்கிரஸ் தலைவர் அனுர்மித் சிங் திரும்ப பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் “தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்ட்ர்” ஆகும்.  இதற்கு விபத்தினால் பிரதமர் ஆனவர் என பொருளாகும்.    இந்த திரைப்படத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராணா குர்மீத் சிங் மகனான அனுர்மித் சிங் காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய பிரமுகர் ஆவார்.  இவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.   அந்த மனுவில் தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தை பஞ்சாபில் திரையிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை இடப்பட்டிருந்தது.

பஞ்சாப் மாநில காக்கிரஸ் இந்த மனு தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.   காங்கிரஸ் கட்சி இந்த திரைப்படத்தை தடை செய்ய முயலாது எனவும் அனுர்மித் சிங் கட்சியை கலந்தாலோசிக்காமல் இந்த பொது நல மனுவை அளித்துள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

அதை ஒட்டி அனுர்மித் சிங் தனது பொது நல மனுவை திரும்ப பெற்றார்.   மனுவின் மீது விவாதம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக சொன்னதால் அரசு வழக்கறிஞர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.  அதை ஒட்டி இந்த வழக்கை விசாரிகக இருந்த பஞ்சாப் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு இந்த பொது நல மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தது..