டெல்லி: 5 மாநிலங்களில் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழுவை காங்கிரஸ் அமைத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆளும் 5 மாநிலங்களில் தேர்தல் அறிக்கையை செயல்படுத்தும் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை. பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் தலைவராக தாம்ராத்வாஜ் சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தவிர, அமர்சிங், அவினாஷ் பாண்டே, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்,  சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவுகான் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் அர்ஜூன் மோத்வாடியா, முதலமைச்சர் கமல்நாத், தீபக் பாபரியா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் குமாரி செல்ஜா, முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், ஆஷா குமாரி ஆகியோர் பெயர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சத்தீஸ்கரில், ஜெய்ராம் ரமேஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரன்தீப் சுர்ஜ்வாலா, முதலமைச்சர் பூபேஷ் பாகெல், மோகன் மார்க்கம், புனியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் எம்பி ராகவன், முதலமைச்சர் நாராயணசாமி, நமச்சிவாயம், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோன்று, அரசுக்கும், ஆட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

அதன்படி, மத்தியப்பிரதேசத்துக்கு 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தீபக் பார்பரியா தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிர்ராதித்யா சிந்தியா, அருண் யாதவ், ஜித்து பட்வாரி. மீனாட்சி நடராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் பிஎல் பூனியா தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் பூபேஷ் பாகெல், மோகன் மார்க்கம், டிஎஸ் சிங் தியோ, தாம்ராத்வாஜ் சாகு, சிவகுமார் டகாரியா, சத்யநாராயண் சர்மா, தனேந்திர சாகு, அர்விந்த நேதன் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

புதுச்சேரிக்கு தலைவராக முகுல்வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், கந்தசாமி, சுப்ரமணியம், வல்சராஜ், சஞ்சய் தத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு தலைவராக அவினாஷ் பாண்டே அறிவிக்கப் பட்டுள்ளார். முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட், ஹேமராம் சவுத்ரி, பன்வாரிலால் மேக்வால், திபேந்தர் ஷெகாவத், மகேந்திரஜித் சிங் மாளவியா, ஹரிஷ் சவ்சாரி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.