பஞ்சாப்:
ஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

 

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த 86 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.