காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மாநில பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று 4மணி நேர ‘பந்த்’ அறிவித்து உள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 12 வரை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய பந்த் அழைப்பின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் குஜராத் பிரிவும் செப்டம்பர் 10, சனிக்கிழமை குஜராத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் 12 வரை க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பந்த் குறித்து கூறிய குஜராத் மாநில பிரிவு தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் கூறுகையில், சமையல் எண்ணெய் விலை 3,000 ரூபாயாகவும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 1,060 ரூபாயாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 ரூபாயாகவும், சிஎன்ஜி கிலோ 84 ரூபாயாகவும் உள்ளது. “அனைத்து பொருட்களும் குடிமக்களின் வாழ்க்கையில் ஒரு அடுக்கு விளைவைக் கொண்டிருக்கின்றன” என்று தாகூர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில், 4.50 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளபோதும், மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 4,58,976 வேலையற்ற இளைஞர்களில் 4,36,663 தகுதியான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும்  காங்கிரஸ் மாநில தலைவர் குற்றம் சாட்டி உள்ளதுடன்,  நூற்றுக்கணக்கான கிராம பஞ்சாயத்துகள் கிராம சேவகர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன, நூற்றுக்கணக்கான அரசு நூலகங்களில் நிரந்தர நூலகர்கள் இல்லை, 27,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என தெரிவித்து உள்ளார்.

பந்த் அழைப்பால் அவசர சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அனைத்து மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.