டில்லி:

மிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள், டில்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அவர்களுடன் மோடி சிறிது நேரம் உரையாடினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி நாடுமுழுவதும் பணியாற்றும் ஆசிரியர் களில்,  சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு  நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 5ம் தேதி)  டெல்லி யில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த விருதைப் பெற தமிழகத் தில்,மன்சூர் அலி மற்றும் செல்வக்கண்ணன் உள்பட நாடு முழுவதும் 46 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் டில்லி சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆசிரியர்கள் தினம் குறித்து மோடி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், நல்ல ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகள் மற்றும் விஞானத்தை வழங்குபவர்கள்!

ஆசிரியர்களுக்கு தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்று முன்னதாக விருது பெற்றவர்களுடன் உரையாடுவதற்கும், இளம் மனதை மாற்றுவதற்கான அவர்களின் அனுபவங்களைக் கேட்பதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்து உள்ளார்.