இன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் பிரஷாந்த் கிஷோர்?

Must read

புதுடெல்லி:
தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை, முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் இப்போதோ தொடங்கியுள்ளன. ஆட்சியை தக்க வைக்க, பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

காங்கிரஸ் மேலிடம், தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, அக்கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர், 600 டிஜிட்டல் பக்கங்கள் அங்கிய நாடாளுமன்ற தேர்தல் வியூக விளக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதற்கிடையே, பிரஷாந்த் கிஷோர் , காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், இதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article