காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் – மதுசூதன் மிஸ்திரி

Must read

புதுடெல்லி:
காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்துள்ளதாகவும், இதில் கிட்டத்தட்ட 6 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “டிஜிட்டல் மெம்பர்ஷிப் மூலம் சுமார் 2.6 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். ஆவணங்கள் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. எனவே மொத்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அமைப்புத் தேர்தலில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கட்சி ஆரம்ப நிலையில் இருந்து தொடங்கும் என்றும், பின்னர் பூத் கமிட்டி தேர்தல், தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மிஸ்திரி கூறினார்.

“இதற்காக, நாடு முழுவதும் 756 மாவட்ட தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளோம். காங்கிரஸ் காரிய கமிட்டி வழங்கிய அட்டவணையின்படி நாங்கள் நன்றாக செல்கிறோம். செப்டம்பர் 2022 க்குள் கட்சிக்கு புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கிடைக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2017 டிசம்பரில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article