சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: வியாழக்கிழமை வாக்கெடுப்பு

Must read

சென்னை,

மிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானத்தின் மீது, நாளை மறுநாள் (23-ம் தேதி) சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் 18ந் தேதி எடப்பாடி தலைமையிலான அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது,  ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், ஓபிஎஸ் அணியினிரும் வலியுறுத்தினர்.

இதை ஏற்க மறுத்தார் சபாநாயகர் தனபால். இதன் காரணமாக சட்டமன்றம் அமளிக்காடானது.

இந்நிலையில், சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டியது. அதோடு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும்,  அவரை நீக்க கோரும் கடிதத்தையும் மு.க.ஸ்டாலின்  கடந்த 9-ந்தேதி கொடுத்தார்.

சட்டப்பேரவை விதி 68-ன்படி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவ தற்கான கடிதம் கொடுத்த 14 நாட்களுக்குப் பிறகுதான் சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அதன்படி, நாளையுடன் 14 நாள் முடிகிறது. இதனால் 23ம் தேதி, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஓட்டெடுப்பின்போது, சபாநாயகர் அவையை நடத்த முடியாது. துணைசபாநாயகர்தான் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதில் பாதிக்குமேல் எதிர்க்கட்சியினரின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால், சபாநாயகர் பதவி விலக நேரிடும்.

தமிழக சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை.  இதில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டதால் 233 உறுப்பினர்களே உள்ளனர்.

இதில், அதிமுகவுக்கு 133 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 98 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

தற்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதால், ஓபிஎஸ் அணியை சேர்ந்த 12 எம்எல்ஏக்களும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் மொத்தம் 110  உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே திமுகவுக்கு கிடைக்கும்.

ஆனால்  சசிஅதிமுகவுக்கு ஆதரவாக  133 சட்டமன்ற உறுப்பினர்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 12 பேர் போக,  மீதம் 121 பேர் ஆதரவு உள்ளது. ஆகவே சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை யில்லா தீர்மானம் தோற்றுவிடும் சூழலே நிலவுகிறது.

ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே சபாநாயகர் தனபாலை பதவி நீக்க முடியும் என்பதே தற்போதைய நிலைமை.

More articles

Latest article