சென்னை:
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்து ரூபாய் நாணயங்களை ஒருசில கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
பத்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடத்துனர்கள் பயணச்சீட்டை வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel