சென்னை:
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இஸ்லாமிய சகோதரர்கள் ரம்ஜான் தொழுகையை வீட்டிலேயே நடத்திக்கொள்ளுங்கள் என்று தமிழக தலைமை காஜி அறிவித்து உள்ளார்.
தமிழகம்உள்பட நாடு முழுவதும் 4வது கட்டமாக கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 25ந்தேதி, இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலங்களின் பொதுவாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம்.
ஆனால், தற்போது, கொரோனா பரவல் தடுப்ப நடவக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து வகையான வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் ரம்ஜான் தொழுக்கைக்கு மசூதி திறக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடியானது. ரம்ஜான் அன்று மசூதிகள் திறக்கப்படத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று இஸ்லாமியர் களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.