Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை:
திமுக தலைமை ஏற்கனவே அறிவித்தபடி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவ கல்வியில் 50% ஒதுக்கீடு குறித்து விவாதம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில்காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, முதுநிலை பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு, கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் இறப்பு விகித்ததை மறைத்து சுகாதாரத்துறை குளறுபடி செய்துள்ளதாக வெளியான புகார் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
முதலாவதாக மறைந்த எம்.எல்.ஏ அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.