சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…….

பெங்களூரு:

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். பரோல் உத்தரவில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்..

* வீட்டில் இருந்து மருத்துவமனை. மருத்துவமனையில் இருந்து வீடு. தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

* நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம்.

* ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்கக்கூடாது.

* பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது

* சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது. வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை.
English Summary
conditions for sasikala by banglore jail department