சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கியது.
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், கடந்த விசாரணை யின்போது, அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
சென்னையில் தங்கியிருந்து கையெழுத்திட ஜாமின் உத்தரவில் கூறியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை உள்பட பல்வேறு பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள மதன், கடந்த ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்துவிட்டு மாயமானார். பின்னர் அவர் கோவை அருகே திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ந்தேதி சென்னை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.